பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

31


நிகரில் சூழ் சுடராய் இரு

ளாய் நிலனாய் விசும்பாய்”

என்றும்,

"புண்ணியம் பாவம்

புணர்ச்சி பிரிவென்றிவையாய்

எண்ணமாய் மிறப்பாய் உண்

மையாய் இன்மையாய் அல்லனாய்”

என்றும்,

“கைத்தவம் செம்மை

கருமை வெளுமை யுமாய்

மெய், பொய், இளமை

முதுமை, புதுமை பழமையுமாய்”

என்றும்,

“மூவுலகங்களுமாய்

அல்லனாய் உகப்பாய் முனிவாய்

பூவில் வாழ்மகளாய்த்

தவ்வையாய் புகழாய்ப் பழியாய்”

என்றும்,

"பரஞ்சுடர் உடம்பாய்

அழுக்குப் பதித்த உடம்பாய்

கரந்தும் தோன்றியும் நின்றும்

கைதவங்கள் செய்தும்"

என்றும்