பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

33


கூரார் ஆழிவெண் சங்கேந்திக்

கொடியேன் பால்

வாராய் ஒரு நாள் மண்ணும்

விண்ணும் மகிழவே”

என்று ஆழ்வார் கூறுகிறார். கண்ணனைப் பஞ்சபூதங்களின் வடிவாய் சூரிய சந்திரர்களின் வடிவாய் சிவன் அயன் வடிவாய்ப் பல பாடல்களிலும் ஆழ்வார் குறிப்பிடுவதை காண்கிறோம். அதுவே உலகப் பெரு வடிவமாகும்.

பஞ்ச பூதங்களும், இரு சுடர்களும் முத்தொழிலும் அடங்கியதே உலகம் என்பதே ஆழ்வார்களின் தத்துவ ஞானத்தின் அடிநாதமாகும். இவையனைத்தையும் கண்ணனாகவும் பரம் பொருளாகவும் காண்பதே ஆழ்வார்கள் காணும் காட்சியாகும். கம்ப நாட்டாழ்வாரின் கடவுட் கொள்கைப் பாடல்களும் இக்கருத்துக்களை வெளிப்படுத்துவதைக் காணலாம்.

மாயா, வாமனனே, என்னும் தலைப்பில் நம்மாழ்வார் மேலும் பாடுகிறார்.

"மாயா! வாமன னே! மது

சூதா! நீ யருளவாய்,

தீயாய், நீராய், நிலனாய்,

விசும்பாய்க் காலாய்

தாயாய்த் தந் தையாய் மக்களாய்

மற்றுமாய் முற்றுமாய்

நீயாய் நீ நின்ற வாறிவை

யென்ன நியாயங்களே!”

என்றும்,