பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. உலகப் பெருவடிவம்

34


"அங்கண் மலர்த்தண்டு ழாய் முடி

அச்சுதனே! அருளாய்

திங்களும் ஞாயிறுமாய்ச் செழும்

பல்சுடராய் இருளாய்

பொங்கு பொழி மழையாய்ப் புக

ழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ

வெங்கண் வெங்கூற்றமுமாம் இவை

யென்ன விசித்திரமே!”

என்றும் இயற்கை சக்தியின் வடிவங்களாய் மாயனைப் பற்றிப் பாடுகிறார். மாயா என்றால் மருட்சியல்ல, மாயா என்றால் சக்தி என்று பொருள். மாயன் என்றால் சர்வ வல்லமை மிகுந்த சக்தியுடையோன் என்று பொருளாகும்.

திருமழிசையாழ்வார் அருளிச் செய்த திருச்சந்த விருத்தம் மற்றுமொரு அருமையான பாடல் தொகுப்பாகும். பரந்தாமனைத் தத்துவ நிலையில் கண்டும், வழிபாட்டு நிலையில் பார்த்தும், செயல் வடிவில் உணர்ந்தும், பலவாறாகப் பாடுகிறார். திருமாலின் உலக வடிவைப்பாடும் போது பஞ்ச பூத வடிவாய்க் குறிப்பிடுவதைக் காணலாம்.

“பூ நிலாய வைந்துமாய்ப்

புனற் கண் நின்ற நான்குமாய்

தீநிலாய மூன்றுமாய்ச்

சிறந்த காலிரண்டுமாய்

மீநிலாய தொன்றுமாகி

வேறு வேறு தன்மையாய்