பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.உலகப் பெருவடிவம்

36


“மஞ்சாடு வரையேழும் கடல்கள் ஏழும்

வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்

எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேலோர்

இளந்தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை”


எனக் குறிப்பிட்டு மலைகளும், கடல்களும் வானமும், மண்ணும் மற்றுமெல்லாம் அடங்கிய வடிவமாகக் கோபாலனைப் பாடுகிறார்.

மேலும், திருமங்கையாழ்வார் தனது பாடல்களில்,

"யாவருமாய் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய் மூவருமாய் முதலாய மூர்த்தி எனவும்,

வானாடும் மண்ணாடும்

மற்றுள்ள பல்லுயிரும்

தானாய யெம்பெருமான்”

எனவும்,

"அண்டமும் இவ்வலை கடலும்

அவனிகளும் குலவரையும்

உண்ட பிரான் . . . . . எனவும்,


திருமாலின் உலகப் பெருவடிவைப் பாடுகிறார்.


”ஏழுலகும் தாழ் வரையும் எங்குமூடி

எண்டிசையும் மண்டலமும் மண்டி

அண்டம் மோழை எழும் தாழிமிகும்

ஊழி வெள்ளம் முன்னகட்டில்

ஒடுக்கிய வெம் மூர்த்தி கண்டீர்”

என்றும் பாடுகிறார்