பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

41




“இறையாய் நிலனாகி எண் திசையும்

தானாய், மறையாய், மறை பொருளாய்,

வானாய்” என்றும்,

“உலகமும், ஊழியும், ஆழியும் ஒண்கேழ்

அலர்கதிரும் செந்தீயுமாவான்”


என்றும், மனமாரப் போற்றிப் பாடுகிறார்.


திருமழிசையாழ்வார் தனது திருவந்தாதியில்,


"வானுலவு, தீவளி, மாகடல், மாபொருப்பு

தானுலவு வெங்கதிரும் தண்மதியும் மேனிலவு

கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்

அண்டந்திருமால் அகைப்பு” என்றும்,

“பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்

ஈட்டிய தீயும் இருவிசும்பும் கேட்ட

மனுவும் சுருதி மறை நான்கும், மாயன்

தன்மாயையிற் பட்டதற்பு"


என்றும் பாடியுள்ளார்.


நம்மாழ்வார் தனது பெரிய திருவந்தாதியில்,


நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை

வாழா வகைவலிதல் நின் வலியே ஆழாத

பாரும்நீ, வானும்நீ, காலும்நீ, தீயும்நீ

நீரும் நீயாய் நின்றநீ என்றும்

ஐம்பெரும் பூதங்களும் நீயே என்று திருமாலைக் குறிப்பிட்டுப் பாடுகிறார்.