பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. உலகப் பெருவடிவம்

44


 பாரதியின் பாடல் வரிகளாகும். பாரதி குறிப்பிடும் அத்தனிச் சுடர் பொருளே திருமாலாகும் என்பதை ஆழ்வார்களுடைய பாசுரங்களில் காணலாம்.

"நிழலினும் வெயிலினும் நேர்ந்த நற்றுணையாய்த்

தழலினும் புனலினும் அபாயம் தவிர்த்து

மண்ணினும் காற்றினும் வானினும் எனக்குப்

பகைமை ஒன்றின்றிப் பயம் தவிர்த்தாள்வான்

உள்ளத்தோங்க நோக்குறும் விழியும்

மெளன வாயும் வரந்தருகையும்

உடைய நம்பெருமான் உணர்விலே நிற்பான்,

ஒமெனு நிலையில் ஒளியாய்த் திகழ்வான்

வேதமுனிவர் விரிவாப் புகழ்ந்த

பிருகஸ்பதியும் பிரமனும் யாவும்

தானேயாகிய தனி முதற்கடவுள்

யான் எனது அற்றார் ஞானமேதானாய்

முக்தி நிலைக்கு மூலவித்தாவான்

சத்தெனத் தத்தெனச் சதுர் மறையாளர்

நித்தமும் போற்று நிர்மலக் கடவுள்

ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை

வாழும் பிள்ளை மணக்குளப்பிள்ளை

வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று

செப்பிய மந்திரத் தேவனை

முப்பொழு தேத்திப் பணிவது முறையே


என்பது பாரதியின் கவிதையாகும்.