பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.உலகப் பெருவடிவம்

48


என்று கூறுகிறார் பாரதி. உலகனைத்தும், உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் கடவுளின் வடிவம் என்னும் கொள்கையைப் பாரதி மேலும் விரிவுபடக் கூறியுள்ளார்.

“உலகுதந்தானும், பலவேறு உயிர்கள்
தந்தானும் உள்உற்று
அலைவு இலா உயிர்கள் தோறும்
அங்கங்கே உறைகின்றானும்
மலரினில் மணமும், எள்ளில் எண்ணெயும்
போல எங்கும்,
அலகில் பல்பொருளும் பற்றி முற்றிய
அரிகாண், அத்தா ”

என்றும்,

காணினும் உளன் ஓர்தன்மை அணு
வினைச் சதகூறு இட்ட
கோணினும் உளன், மாமேருக்
குன்றினும் உளன், இந்நின்ற
தூணினும் உளன் நீ சொன்ன சொல்
லினும் உளன், இத்தன்மை
காணுதி விரைவின் ” என்றான்,

என்று பிரகலாதன் தன் தந்தையிடம் கூறியதைக் கம்பன் தனது கவிதைகளால் காட்டியதையும் இங்கு நினைவு கூறத்தக்கது.

“ரிக் வேதத்திலுள்ள புருஷ சூக்தம் சொல்லுகிறது. இஃதெல்லாம் கடவுள் என்று. இந்தக் கருத்தை ஒட்டியே கீதையிலும் பகவான் "எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும்,