பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

51


என்றெல்லாம் மிக நுட்பமாகக் கருத்தாழத்துடன் கண்ணம்மாவின் காட்சியைப் பாரதி என்னும் மகா கவிஞன் தனது இனிய கவிதைகளில் காட்டுகிறான். இந்தக் கவிதைகளில், சொல் நயம் பொருள் நயத்துடன் மிக உயர்வானதொரு தத்துவ தரிசனத்தையும் பாரதத்தின் பண்பாட்டு மரபையும் காண்கிறோம்.

“உங்களுடைய சர்வநாராயண சித்தாந்தத்தின துணிவு யாது ” என இந்திரன் கேட்க, "எல்லா வஸ்துக்களும், எல்லா லோகங்களும், எல்லா நிலைமைகளும், எல்லாத் தன்மைகளும், எல்லா சக்திகளும், எல்லா ரூபங்களும் எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்” என்று நாரதர் விடை கூறுவதாக பாரதி தனது வசன கவிதையில் குறிப்பிடுகிளார். இந்த வாதத்தின் முடிவாக “ சர்வம் விஷ்ணு மயம் ஜகத்” என்று நாரதர் கூறியதை பாரதி எடுத்துக் காட்டித் தனது வசன கவிதையை முடிக்கிறார்.

இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வானம் இனிமையுடைத்து, காற்றும் இனிது, தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது, ஞாயிறு நன்று, திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. ஆறுகள் இனியன. உலோகமும், மரமும், செடியும், கொடியும் மலரும் காயும் கனியும் இனியன. பறவைகள் இனியன. ஊர்வனவும் நல்லன. விலங்குகள் எல்லாம் இனியவை. நீர் வாழ்வனவும் நல்லன.

மனிதர்கள் மிகவும் இனியர். பெண் இனிது. குழந்தை இன்பம், இளமை இனிது. முதுமை நன்று. உயிர் நன்று. சாதல் இனிது. உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன. உயிர் சுவையுடையது. மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம். உணர்வே அமுதம். உணர்வு தெய்வம்.

மனம் தெய்வம், சித்தம் தெய்வம், உயிர் தெய்வம், காடு, மலை, அருவி, ஆறு, கடல், நிலம், நீர், காற்று, தீ, வான் ஞாயிறு, திங்கள்,