பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. பள்ளியெழுச்சிப் பாடல்கள்

54


அவர் காலத்தில் பாரத நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அன்னிய ஆட்சியின் கீழ் அடங்கிக் கிடக்கிறது. நாட்டு மக்கள் மயங்கி நெடும் தூக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள். நாட்டு மக்களின் தூக்கத்தைப் பாரத தேவியின் பாரத அன்னையின் தூக்கமாகவே பாரதி கருதுகிறார். அரங்கனை எழுப்ப ஆழ்வார் பள்ளியெழுச்சி பாடியதைப் போல பாரத அன்னையை எழுப்ப பாரதியார் பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடியுள்ளார்.

ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சிப் பாசுரங்களைப் போலவே பாரதியின் பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் நெஞ்சைக் கவர்வதாகும். விழிப்புணர்வையும் எழுச்சியையும் உண்டாக்குவதாகும். ஆழ்வார்களின் மரபு வழியைக் காலத்திற்கேற்ற முறையில் காலத்திற்குத் தேவையானவகையில் பாரதி பாடியுள்ள பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் மிக அற்புதமாக அமைந்துள்ளன.

காலைக் கதிரவன் தோன்றி ஆகாயத்தின் மேலே வந்து கொண்டிருக்கிறான். இரவு நேரத்தின் இருண்ட இருள் அகன்றுவிட்டது. காலைப் பொழுது தோன்றி வெளிச்சம் பரவிவிட்டது. மலர்கள் எல்லாம் மலர்ந்துவிட்டன. மலர்ந்த மலர்களிலிருந்து மது ஒழுகிக் கொண்டிருக்கிறது. வானவர்களும் அரசர்களும் மக்களும் திரண்டு கோயில் வாசலில் குழுமியிருக்கிறார்கள். யானைகளின் கூட்டமும் முரசுகளின் பேரொலியும் எங்கும் நிறைந்து அலை கடல் போல் மக்களும் மற்றவர்களும் திரண்டு நிற்கிறார்கள். அரங்கத்தம்மா! இன்னுமா உரக்கம், பள்ளி எழுந்துவாராய் என்று ஆழ்வார் பாடுகிறார்.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கனவிருள் அகன்றது காலையம் பொழுதாய்
மது விருந்து ஒழுகின மாமலரெல்லாம்