பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 55

55


வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்றிட்டமும் பிடியொடு முரசும்,
அதிர்தலில் அலைகடல் போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா, பள்ளியெழுந் தருளாயே!

என்று ஆழ்வார் பாடுகிறார்.

பக்தனின் அபயக் குரலுக்குச் செவி கொடுத்து உதவி செய்வது திருமாலின் திருவுள்ளம். கஜேந்திரனை முதலை கவ்வ, அந்த யானையின் அபயக் குரலைக் கேட்டு அதன் துயர்துடைத்த அரங்கனைக் கூவி அழைத்துத் தூக்கத்திலிருந்து விழித்தெழுமாறு ஆழ்வார் வேண்டுகிறார்.

"கொழுங்கொடி முல்லையின் கொழு மலரனவிக்
கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ
எழுந்தன மலரணைப் பள்ளி கொண்டன்னம்
ஈன்பனி நனைந்த தமிருஞ்சிறகுதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்,
வெள்ளையிறுறவதன் விடத்தினுக்கனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே! ”

என்று ஆழ்வார் பாடுகிறார்.

எல்லாதிசைகளிலும் சூரியனின் ஒளிபரவிவிட்டது. நட்சத்திரங்களின் ஒளியெல்லாம் சுருங்கிவிட்டது. இருள் அகன்றது. கமுகின் பாளைகள் எல்லாம் நறுமணம் வீசத் தொடங்கிவிட்டது. மெல்லிய காலைக் காற்று வீசத் தொடங்கிவிட்டது. ஒளிவீசும்