பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. பள்ளியெழுச்சிப் பாடல்கள்

60


துடியிடையார் சுரிகுழல் பிழிந்து உதரித்
துகிலுடுத் தேளினர் சூழ்புனலரங்கா
தொடையொத்ததுளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி யென்றும்
அடியனை, அளியன் என்றருளி உன்னடி யார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே!”

என்றெல்லாம் தொண்டரடிப் பொடியாழ்வார் பாடி மகிழ்கிறார்.

திருமலையில் சுப்ரபாதமும் திருவரங்கத்தில் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் பாடுவது நமது மரபாகும். திருவரங்கம் காவிரி சூழ்ந்த ஊராகும். நீரும், கால்வாய்களும் கழனிகளும் வயல் வெளிகளும், சோலைகளும் மரங்களும் அழகிய நந்தவனங்களும் பசுமையும் நிறைந்த காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். காலைப் பொழுதுக்குக் கட்டியம் கூறுவதைப் போல கோழி கூவும். குயில்கள் விழித்தெழுந்து பாடத் தொடங்கும். பறவையினங்கள் கண் விழித்து தங்கள் குஞ்சுகளுடன் இனிய குரல்களை எழுப்பி இரை தேடப் புறப்படும். ஆயர்கள் எல்லாம் தங்கள் ஆவினங்களைக் காணத் தொழுக்களுக்குச் செல்வார்கள். கன்றுகளை அவிழ்த்து விட்டுப் பால் கறந்து தங்கள் பாற் குடங்களை நிறப்புவார்கள். ஆயர்பாடிப் பெண்கள் தங்கள் பாற்குடங்களைத் தூக்கிக் கொண்டு ஊருக்குள் செல்வார்கள். தடாகங்களில் தங்கியுள்ள பறவையினங்கள் தங்கள் சிறகுகளில் உள்ள பனித்துளிகளை உதரிக் கொண்டு பறந்து செல்லத் தொடங்கும்.

பலபலவெனப் பொழுது புலரத் தொடங்குகிறது. காகங்கள் கரந்து சத்தமிட்டுக் கொண்டு கூட்டாகப் பறந்து செல்கிறது. கதிரவன் கடலில் மூழ்கி எழுவதைப் போல தீப்பிழம்பாக