பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3.பள்ளியெழுச்சிப் பாடல்கள்

68


அன்னையே! உன் எழில் காண்பதற்கு, விழியருள் காண்பதற்கு உனது அழகிய கண்களின் கருணையைக் காண்பதற்கு நாங்கள் எத்தனை ஆவலுடன் இருக்கிறோம் என்பதை நீ அறிய மாட்டாயா?

வெண்மையான உறைபனி மூடியிருக்கும் சிகரங்களைக் கொண்டிருக்கும், இமயம் பெற்றெடுத்த பெருந்தவப் பயனே, அருந்தவப் பாவாய், உனது அருளைப் பெருவதற்காக என்னென்ன வகைகளில் எல்லாம் தவங்கள் செய்து எத்தனை காலம் ஏங்கிக் கொண்டிருப்போம். இன்னும் துங்கிக் கொண்டிருக்கிறாயே! உனக்கு இது நன்றாக இருக்கிறதா? எங்கள் ஆருயிர் போன்றவளே! உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எங்களைக் காப்பாற்று வாயாக என்று கூறுகிறார் பாராதியார்.

நின்னெழிர் விழியருள் காண்பதற் கெங்கள்
நெஞ்சகத்தாவலை நீயறியாயோ?
பொன்னனையாய், வெண் பனிமுடி இமையப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கேழையம் யாமே
இன்னமும் துயிலுதியேல் இது நன்றோ?
இன்னுயிரே! பள்ளியெழுந்தருளாயே!

என்பது பாரதியின் அருங்கவிதையாகும்.

குழந்தைகள் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து எழுப்பும் வரை தாய் தூங்கிக் கொண்டிருக்கலாமா என்று பாரதத் தாயைக் கவிஞர் கேட்கிறார். இது பற்றி இந்த மாநிலத்தை, மாபெரும் பூமியை, மாபெரும் தேசத்தைப் பெற்றவளே, நீ அறிய மாட்டாயா? என்று கவிஞர் கேட்கிறார்.