பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3.பள்ளியெழுச்சிப் பாடல்கள்

70


தொண்டரடிப் பொடி யாழ்வார் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் திருமாலின் திவ்ய தேசங்கள் தோறும் பெருமாளின் ஆலயங்கள் தோறும் பக்தர்களின் வீடுகள் தோறும் பஜனை பாடும் வீதிகள் தோறும், பாடப்பட வேண்டிய பாசுரங்களாகும். பாடிக் கொண்டிருக்கும் பாசுரங்களாகும். அதே போல பாரதியின் பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் வீடுகள் தோறும், மேடைகள் தோறும், கல்விச் சாலைகள் தோறும் பலவேறு அரங்குகள் தோறும், அணிகள் தோறும் பாட வேண்டிய பாடல்களாகும். பாரத நாடு அன்னியருக்கு அடிமைப் பட்டிருந்த காலத்தில், அடிமைப்பட்டிருந்த மக்களை உறக்கத்திலிருந்தும், மயக்கத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும், அச்சத்திலிருந்தும் எழுப்புவதற்காகப் பாடப் பட்டப் பள்ளியெழுச்சிப் பாடல்கள் இவையென்றாலும் எல்லாக் காலத்திற்கும் ஏற்றவைகளாக அவை அமைந்துள்ளன.

நாட்டில் மயக்கமும் அறியாமையும் அச்சமும் அடிமைச் சிறுமதியும் இருக்கும் வரை, அவை நீங்க, மக்களை விழிப்படையச் செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே பாரதியின் பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் இன்றைக்கும் பொருள் நிறைந்தனவும், பொருந்துவனவுமாகும். மேலும் அப்பாடல்கள் வரலாற்றில் இடம் பெற்று இப்போது அது ஒரு வரலாற்று ஆவணமாகி விட்டது. அவைகளைப் படித்துப் பயன் பெறுவது மிகவும் அவசியமானதாகி விட்டது.

தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் பாரதியாரின் பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் ஆழ்வார் அரங்கனையும், பாரதியார் பாரத அன்னையையும் நேருக்கு நேராக முன்னிலைப் படுத்தி நின்று பாடும் பாடல்களாகும். ஆழ்வார் பாடல்கள் பத்து - பாரதியாரின் பாடல்கள் ஐந்து. பாரதியார் ஐந்துடன் நிறுத்திக் கொண்டார். அரங்கனின் தூக்கம் அரிதுயில் அனந்தசயனம், பாரதத்தாயின் தூக்கம்