பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

77


மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் தனது கவிதைகளில் பாடல்களில் குறிப்பிடுகிறார்.

கீதையில் கண்ணபிரான், குணத்திற்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன் செய்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தேன் என்று உணர் என்று நான்காவது அத்தியாயத்தில் பதிமூன்றாவது சுலோகத்திலும், பரந்தபா, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரர் இயல்பின் படி விளையும் குணங்களின் படி வகுப்புற்றனவாம் என்று பதினெட்டாவது அத்தியாயத்தில் நாற்பத்தி ஒன்றாவது சுலோகத்திலும் கூறியிருப்பதைக் காண்கிறோம். நான்கு வர்ணங்களைப் படைத்தது ஆண்டவன்தான் என்றால் அது பிறப்பால் அல்ல என்று கூறியுள்ளதும் ஆண்டவன்தானே. ஆண்டவன் படைப்பில், மனிதன் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களும் சமம் என்பது வைணவ சித்தாந்தத்தின் அடிப்படை ஆதாரமான கோட் பாடாகும்.

பாரதி தனது பகவத் கீதை தமிழாக்க நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில், எனவே கண்ணபிரான் மனிதருக்குள் சாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமேயன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லட்சணமென்று சொல்கிறார் என்று மிகவும் தெளிவாகவே குறிப்பிடுகிறார்.

இன்னும் பாரதி கண்ணன் பாட்டுகளில் கண்ணன் என் தந்தை என்னும் தலைப்பிலான பாடல் வரிகளில்

நாலு குலங்கள் அமைத்தான் - அதை
நாசமுறப்புரிந்தனர் மூட மனிதர்