பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.சாதி வேறுபாடுகளை நீக்கி மக்களை ஒன்றுபடுததும பணியல்

90


வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிட ஜாதி”

என்றும்,

“ சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார், ”

“சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னிற் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம் - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்”

என்றும் ஊருக்கு நல்லது சொல்வேன் என்று தொடங்கி முரசு கொட்டி பாரதி பாடுகிறார்.

“ அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்”

என்று சமூக நீதிக் கருத்தை பாரதி மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார்.

பாப்பாப் பாட்டில் பாரதி இன்னும் ஒருபடி மேலே போய்:

“ சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்