பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 ஆழ்வார்கள் காலநிலை என்று வேள்விகுடிச் சாஸனம் கூறுகின்றது. காஞ்சி வாய்ப் பேரூர் என்பது, கொங்குநாட்டில் நொய்யலாறு என வழங்குங் காஞ்சிமா நதிக்கரையின் பக்கத்துள்ள பேரூர் என்ற பிரபல சிவதலமாகும். இதனை மேலைச் சிதம்பரம்' என்றுங் கூறுவர். இவ்வாறு பிரசித்தமான சிவதலத்தில் திருமாலுக்குப் பெரியதோர் கோயிலமைத் தவன் இப்பாண்டியன் என்பதனால், அக்கடவுளிடம் இவன் வைத்திருந்த பத்தியின் பெருமை இத்தகைய தென்பது விளங்கும், “ கொங்குங் குடந்தையுங் கோட்டியூரும் பேரும் எங்குந் திரிந்து விளையாடு மென்மகன் (பெரியாழ், திருமொழி, 2, 6, 2.) என்ற பெரியாழ்வார் திருவாக்கு இந்நெடுஞ்சடையன் கொங்கு நாட்டிற் புரிந்த இவ்வரிய திருப்பணியை ஞாபகப்படுத்துகின்றது. ஆழ்வார்கள் பாடல்பெற்ற திவ்யதேசமொன்றையும் உடையதன்று என்று கருதப் படும் கொங்குநாடு கண்ணன்விளையாடும் தலங்களி லொன்றாகப் பெரியாழ்வாரால் முற்பட எண்ணப்படு வதற்குக் காரணம் யாது? இதற்கு ஏற்ற விடை யாவது-தம் சிஷ்யனும் பரமபாகவதனுமான நெடுஞ் சடையனால் அந்நாட்டுப் பேரூரில் நிருமித்துப் பிரதிஷ்டிக்கப் பெற்ற மூர்த்தியைப்போன்ற கொங்கு நாட்டு மூர்த்திகளைத் திருவுள்ளத்துக்கொண்டே. இப்பெரியார் அவ்வாறு பாடியிருத்தல் வேண்டும் என்பதேயாம். 1. "தண்பனி மலர்ப்படப்பை, குலவுமக் கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார்" என்ற சேக்கிழார் வாக்குங் காண்க (பெரிய புராணம், ஏயர்கோன். 88.)