பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

118 ஆழ்வார்கள் காலநிலை என்று: இந் நோன்பு நிகழும் காலத்தைக் குறிப்பிடுதல் தெரியலாம். இம்மார்கழி நீராட்டின் பொருட்டுக் கோகுலத்து ஆயர்குலமகளிர் துயிலெழுந்து யமுனைத் துறைக்குச் சென்றதையும், அக்காலத்துக் கண்ண பிரான், அவர்கள் கரையில் வைத்த ஆடைகளையெல் லாம் கவர்ந்து குருந்தமரத்தில் ஏற, அம்மகளிர் வந்து தத்தந் துகில்களைத் தருமாறு பெருமானைப் பிரார்த் தித்ததையும் கொண்டு கூறுமிடத்தே" கோழி யழைப்பதன் முன்னங் குடைந்து நீ ராடுவான் போந்தோம் ஆழியஞ் செல்வ னெழுந்தான்.................. துகிலைப் பணித்தருளாயே (நாய்ச், திருமொழி, 1). என்றும், தாமே காமனோன்புக்காக நீராட்டம் நிகழ்த்தி யதைக் கூறுமிடத்தே வெள்ளை நுண் மணற்கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன்முன்னந் துறைபடிந்து (க்ஷ, 1, 2). என்றும் பாடியருளுதல் அறியத்தக்கது. இவற்றால்' கோழி, கூவுதற்கும் கிழக்கு வெளுப்பதற்கும் முன்பே நீராடித் தங்கள் நோன்புச் சடங்குகளை வைகறையில் முடித்து விடுவதே மகளிரது பழைய வழக்கென்பது நன்கு தெரியலாம். அஃதாவது--காலை 4-மணிக்கு முன் எழுந்து 5-மணிக்குள் அந்நீராட்டமும் நோன்பும் முடி வுறும் என்க. கண்... அம்பா வாடலை (தைத் நீராடலை) உடைய கன்னியர் சடங்கறிந்த முதுபார்ப்பனிமார் நோற்கும் முறையை காட் டப் பனியையுடைய புலர்தற்கண் ஆடி” என்பது பரிமேலழக ருரை.