பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 133

     நெடுந்தாண்டகம்; திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்பன.

திருமங்கையாரது பாசுரங்களை ஆராயுமிடத்தும் அவர் வரலாறுகளில் ஒரு சில தெரியவருகின்றன. தம் அருளிச் செயல்களில், சோழ மண்டலத்தே ஆலிநாட்டுக்கும் திருமங்கை குறையல் என்ற நகரங்கட்கும் தலைவர் என்றும், பெருஞ்சேனை யுடையவரென்றும்' யானைப் படைக்குத் தலைமையும் போரில் அதனை நடத்துந் திறமையும் உடையர்' என்றும், பெரிய குதிரைவீர ரென்றும், வாட்போரில் பகைவரின் உடல் துணிக்க வல்லவர் என்றும் தம் சேனைப் பெருமை யையும் வீரப்பெருமையையும் சிறப்பித்துப் பாராட்டுகின்றார்: 1. இந்நாட்டின் தலைமையூர், இக்காலத்துத் திருவாலி திருநகரி என வழங்குகின்றது. 2. கூரணிந்த வேல்வலவ னாலி நாடன் கொடிமாட மங்கையர்கோன் குறையலாளி”. (பெரிய திருமொழி, 4, 4, 10). 3. "வாட்டிறற் றானை மங்கையர் தலைவன்” (10, 9, 10). 4. 'அமரிற் கடமா களியானைவலான்' (2, 4, 10); 'கடமாருங் கருங்களிறு வல்லான் வெல்போர்க் கலிகன்றி' (2, 5, 10) 5. 'ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல்மாவலவன்' (5, 8, 10). 6, "மருவலர்தம் முடல் துணிய வாள்வீசும் பரகாலன்” (3, 9, 10).