பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

136 ஆழ்வார்கள் காலநிலை குலத்தவரென்றும், நீலனென்ற திருநாமமுடைய ரென்றும் நூல்கள் கூறும்'. இவ்வாறு திருமங்கை மன்னன் வரலாறுகளாக வழங்குவனவற்றுடன் அவர் திருவாக்குக்கள் சில அம்சங்களில் ஒற்றுமைபெறுதல் காணலாம். இனி, இப்பெரியார் வாழ்ந்த காலநிலையை கோக்குவோம். திருமங்கையார் காலம்பற்றி மூன்று வியாசங்கள் பலவாண்டுகட்கு முன்பே என்னால் எழுதப்பட்டுள்ளன. தம் பெரிய திருமொழியில் திரு நறையூர்ப் பதிகத்தே, சோழன் கரிகாலன்வழியில் வந்த கோச்செங்கணானது போர் வெற்றிகளையும் அவனது திருமாலடிமைத் திறத்தையும் பாடுதலாலும், வேறு சில பதிகங்களில் பல்லவவேந்தரது அறிவுதிருவாற்றல் களையும் அவரது திருமால்பத்திமையையும் பல் லிடத்தும் சிறப்பித்தலாலும், கடைச்சங்கத்துக்குப் பின்னர்த் தென்னாட்டிற் பல்லவராதிக்கம் தலைசிறந்து நின்றகாலத்தில் திருமங்கை மன்னன் எழுந்தருளி யிருந்தவர் என்று சொல்லலாம். இவ்வாறாயின், பல்லவர்பெருமை முழுதும் குலைந்ததும் ஆசாரியத்தலைவரான நாதமுனிகள் வாழ்ந்ததுமான 9-ஆம் நூற்றாண்டிறுதிக்கு முன்புள்ள காலவிசேடமே இவ்வாழ்வார்க்கு உரியதென்பது பெறப் படும். பட வே, அவ்விடைப்பட்ட காலத்துள் 1. ஸமஜாயத தத்ர சாபரப்ரமுக: காசந நீலநாமக.' (திவ்ய சூரி சரிதம்) 'தண்டமிழ் செய்த நீலன்றனக் கினியானை (இராமாநுச நூற். 17) 2. செந்தமிழ், தொ-3, பக் 483; தொ-4, பக்-61; தொ -21, பக்.5.6