பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை திருமால் முல்லைநிலத்தெய்வமாதலின், அப்பெருமான் மேவிய கோயில்கள் காடும் காட்டுச்சார்புமான இடங் களிற்றான் ஆதியில் அமைந்திருந்தனவாதல் வேண்டும். இப்பொழுதுள்ள பழைய திருமால் திருப்பதிகள் பெரும் பாலும் அவ்வாறமைந்திருந்தவை என்றே கருதற் குரியன. முல்லைக்குரிய தமிழ்மக்களை ஆயர் என்று தொல் காப்பியர் கூறுவர்.' அதனால், அவ் வாய்க்குலத்துள் ஒளித்துவளர்ந்த கண்ணபிரானே, முல்லை நிலத்து மக்கள் தம் தொழுகுலமாக வணங்கிவந்த திருமாலவ தார மூர்த்தி யாயினர். அப்பெருமானது பாலசரித்திரங் களாகத் தமிழாயர்கள் வழங்கிவந்தவை பலவாம்'. அவற்றுள், அப்பெருமான் நப்பின்னை என்ற ஆயர்குல வணங்கை-அவ்வாய்க்குல வழக்குப்படி கன்யாசுற்க ‘மேவிய சிறப்பினேனோர் படிமைய' என்பதற்கு-'நால்வகை நிலத்தினும் மேவிய சிறப்பையுடைய மக்களையல்லாத தேவரது படிமையவாகிய பொருள்கள்' என்று பொரு ளும், சிறப்பி னேனோர்' என்றதனால், சிறப்புடையார் மக்களுந் தேவருமாகலின் மக்களல்லாதாரே தேவரென்று பொருளாயிற்று; படிமை என்பது ப்ரதிமா என்னும் வட மொழித் திரிபு: அது தேவர்க் கொப்புமையாக நிலத்தின் கட் செய்தமைத்த தேவர்மேல் வந்தது. அவருடைய பொருளாவன 'பூசையும் விழாவும் முதலாயின' என்று விசேடமும் எழுதியிருத்தல் பெரிதும் பொருத்த முடையதா தல் காண்க. நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்துக்கு வேறு பொருள் கூறுவர். 1. தொல். அகத்திணை. 21. 2. 'தமிழ் நாட்டில் வழங்கிய கண்ணபிரான் சரிதங்கள்' என்ற தனி வியாசத்துள், இதனை விரித்து விளக்கியுள்ளேன். (செந்தமிழ், தொகுதி 8, பகுதி, 4.)