பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

150 'ஆழ்வார்கள் காலநிலை பாட நேர்ந்தபோது 'மருவலர் தம் முடல்துணிய வாள்வீசும் பரகாலராகிய' தம்மையும் வியப்புறச்செய்த வீரச்செய்தி யொன்று நிகழ்ந்ததைக் கச்சிக்கு விசேடணமாக்கி அவர் கூறினர் எனின், அது கவியின் இயற்கைச் சிறப்பைக் காட்டுமேயன்றிப் பிறிது குறிக்குமோ? தம் காலத்தே பெருவேந்தனாயும் வீரனாயுமிருந்த பல்லவனையும் வெற்றி கொண்ட அரசனொருவனது அரிய பெரிய செயலை வீரசிகாமணியாகிய ஆழ்வார் நேரில் அறிந் திருந்தும், அதனை மறைத்துச் செல்வதற்கு, வீரத்தால் அப்பல்லவனுக்கு ஆழ்வார் பட்டிருந்த கடமையென்னோ? வென்ற வேந்தன் எத்தகையவனாயினும், வீரத்தால் அவனடைந்த புகழைச் சூரரும் பண்டிதருமாயுள்ள இவ் வாழ்வார் புகழாமல் வேறு யார் புகழ்வதற்கு உரியவர்? திருநறையூர்த் திருமாலை வழிபட்டுத் திருப்பணி செய்த கோச்செங்கணானைப் பரமபாகவ தனாகப் புகழ்ந்து வருந் திருமங்கை மன்னன், அவன் சிவபிரானுக்கு 70-மாடக் கோயில் கட்டிப் பெருமை பெற்றதை"இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ வீசற் கெழின்மாட மெழுபதுசெய் துலக மாண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடஞ் சேர்மின்களே” என்று சிறப்பித்துப் போந்தனர்; இங்ஙனஞ் சிறப்பித்தது, திருமாலடியவனாக அவ்வரசனைப் பெரிதும் புகழ்ந்துவருஞ் சந்தர்ப்பத்துக்குப் பொருந்தாது போற் றோன்றினும்', அவன் நிகழ்த்திய பெருஞ்செயலொன்றை மறையாது எடுத்துக்கூறுவதில் இவ்வாழ்வார்க்குள்ள விருப்ப மிகுதியை அவ்வடிகள் குறிப்பிடுவனவன்றோ ? 1. இங்ஙனஞ் சிறப்பித்துப் போந்ததற்கு, ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வேறுகருத்து நயம்பெறக் கூறியருளுவர்.