பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

154 ஆழ்வார்கள் காலநிலை சூரிசரிதமுதலிய எல்லாச் சரித்திர நூல்களும் ஒருமுக மாகக் கூறுகின்றன, இதனை எவரும் மறுக்க வியலாது. அதனால் சம்பந்தர் காலமாகத் தெளியப்பட்ட 7-ம் நூற் றாண்டின் பிற்பாதியிலிருந்து வயிரமேகன் என்று பெயர்பெற்ற அரசன் காலம் வரை இவ்வாழ்வார் வாழ்ந் தவர் எனல் வேண்டும். அவ்வயிர மேகன் தந்திவர்மனாகுமிடத்து, 780-ல் பட்டம் பெற்ற அவன் காலத்துக்கும் சம்பந்தமூர்த்திகள் காலத்துக்கும் ஒன்றேகால் நூற்றாண்டு இடைப்படுத லால் ஆழ்வார்க்கும் 125-ஆண்டு வயதாகக் கொள்ள நேரும். இத்துணை நீண்டவயது மக்கட்குக் கூறப்படு வதைச் சரித்திரவறிஞர் ஆக்ஷேபிக்கத் தடையில்லை. அதனால் வேத நூற் பிராயநூறு' என்றபடி, உலக வியல்புக்கு ஒப்பவைத்து நோக்குமிடத்து, தந்திவர்மனே ஆழ்வாரால் வயிரமேகன் என்று கூறப்பட்டவன் என் பது பொருந்தாதாகின்றது. இவனையன்றி, இவன் தந்தை நந்திவர்மனாகவேனும் அக்கந்தியை வெற்றிகொண்ட இரட்ட வேந்தனாக - வேனும் கொள்ளுமிடத்து, சம்பந்தர் காலத்திலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு உள்ளாகவே திருமங்கையார் வாழ்ந் திருந்தவர் என்பது அமையத் தடையில்லை, ஒரு சிலர், பரமேச்சுரவிண்ண கரப் பதிகத்தில் ஆழ்வார், தாம் சிறப்பிக்கும் பல்லவமல்லன் செய்தி களைக் கூறுமிடத்து- பண்டு, பண்டொருகால், முனநாள், அன்று என்ற சொற்களைப் பெய்து பாடுதலால், அவ்வர சனுக்கு நெடுங்காலத்துக்குப் பின்பு இவர் வாழ்ந்த வராதல்வேண்டும் என்று கருதுவர். அவர் கருதுமாறு, காலங் கடந்த பழஞ்செய்தி யைத்தான் அச்சொற்கள் குறிப்பிடவேண்டும் என்ற