பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

156 ஆழ்வார்கள் காலநிலை இன்னும், அவர், வயிரமேகன் என்பது பல்லவர்க்குப் பொதுவாக வழங்கிய குடிப்பெயர் என்று பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தால் அறியப் படுதலின் அப்பெயர் வழக்கைக் கொண்டு ஆழ்வார் காலவரையறை செய்தல் கூடாதென்பர். இவ்வயிரமேகப்பெயர் பல்லவர்க்குள் முதன் முதல் வழங்கத் தொடங்கியது, இராஷ்டிரகூடனான தந்தி துர்க்கன் சம்பந்தம் அப்பல்லவர்க்கு உண்டான பின்பே யாதல் வேண்டும் என்பது மேலே கூறப்பட்டது. அப் பெயரைப் பல்லவவரசர் சிலர் பெற்றிருந்தனர் என்பதற் குச் சாஸனக்குறிப்பு உள்ளதாயினும், அது பல்லவரது குடிப்பொதுப் பெயராக வழங்கியதென்பதற்கு ஆதாரம் ஒன்றுமே இன்று. சிலர் கருதியதுபோல, அவ்வாறு பொதுப்பெயராக வயிரமேகப் பெயர் வழங்குவதென்று பெரியவாச்சான் பிள்ளை எழுதினவரும் அல்லர். மன்னன்...வயிரமேகன்' என்ற தொடர்க்கு அப்பெரியார் எழுதிய வியாக்கியான பந்தியாக அச்சுப்பிரதியில் உள்ள தாவது: ராஜா-தொண்டைமான் சக்கரவர்த்தி; வயிரமேகன் என்று அவற்கு(க்குடி)ப் பெயர் " என்பதே. 102) 'பண்டையில சிறப்பால்' (குறள, 1152, பரி.) 'முனனுந தொழத் தோன்றி' (யாப். வி, பக். 402), 'வந்தணங்கா மன்னர் தேய முன்னாள்' (இறை, களவியல், 156, உதா.) 'முன்னாள் முறைமையின்... அல்லிடைப் பெயர்ந்தனர்' (சிலப். 13, 135-6), (முன்னொருகா லென்மகனைக் கண்டே னென் கண்குளிர' (சீவக. (1807), 'பகடுந்திவந்தார் அன்றவிய ...வேல்கொண்ட கோன்' (இறை, களவியல், 158, உதா.) ' அன்று நீ செல்லக் கிடவென்றாய்' (பொய்யா 'மொழியார் பாட்டு - தமிழ்நா. சரிதை, 76) என்பவற்றாலும், தெளிக,