பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 157 இவற்றுள் அவற்கு(க்குடி)ப் பெயர் என்பதிலுள்ள குடி. என்பது பிற்காலத்தவரால் இடைச்செருகப்பட்ட சொல் லாகும். இச்செய்தி, அவ் வாக்கியத்தை விளக்கவந்த முன்னோரான அரும்பதவுரைகாரர்-" அவற்குப் பெயர் -- சக்கரவர்த்திக்குப் பெயர்" என்று குடியைவிலக்கிப் பொருளெழுதிச் செல்வதனாலும், “குண்டலி தாக்ஷரம் க்வாசித்கம், அரும்பதத்துக்குப் பாடமில்லை என்று, பதிப்' பாளரே கீழ்க்குறிப்பில் குடி' என்பது இடைச்செருகல் என்பதைத் தெளிவாக்கியிருத்தலாலும் விளக்கமாகும்.. ஆகவே. வயிரமேகன் என்பது பல்லவக்குடியின் பொதுப்பெயரன்றிப் பல்லவ சக்கரவர்த்தியொருவன் பெயர் என்பதே பெரியவாச்சான் பிள்ளையின் திருவுள்ளம் என்பது நன்குவெளியாதல் காண்க. மற்றுஞ்சிலர், வயிரமேகனென்ற பெயர் வேறு பல்லவர் சிலர்க்கும் வழங்கியிருத்தல் சாஸனங்களால்' அறியப்படுகின்றதென்றும், அவருள் ஒருவனை யே ஆழ்வார் கூறினராதல் வேண்டும் என்றும் கருதுவர்.. அச்சாஸனங்களின் எழுத்தமைதியால், அவை தந்தி வர்மன் காலத்துக்குப் பிற்பட்டவையே என்பது சாஸன வாராய்ச்சி வல்லார் தெளிய அறிந்ததாம். இத்தந்திவர்மன் மகனான தெள்ளா றெறிந்த நந்தி வர்மன் ஆழ்வாராற் பாடப்படுதற்கேற்ற திருமாலடி மைத்திறம் உள்ளனவல்லன். இத்தெள்ளாற்றுநந்தியின் மகனும், பேரனும், ஆசாரியத் தலைவரான ஸ்ரீமக் - காத, முனிகள் விளங்கிய காலத்தில் வாழ்ந்திருந்தவர்கள்.. 1. வளைவு களுக்கு உட்பட்ட எழுத்துக்கள் வழக்கருமை யானவை என்பது இதன் பொருள். 2. Ep. Rep. Nos. 150 and 152 of 1916.