பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

164 ஆழ்வார்கள் காலநிலை கூறு மிக அடுத்த ஊர்களில் வாழ்ந்து விளங்கிய அவ்வடியார்கட்குப் பெரிதும் பொருத்தமுடையதன்றோ? சம்பந்தர் காலம் இனிச் சம்பந்தமூர்த்திகளின் காலத்தைப்பற்றி அறிஞர் பலரும் அறுதியிட்டிருக்கின்றனர். அம்முடிவை நாமும் இங்குச் சுருங்கச் சோதித்துக் கொள்வோம், சிறப்பாக மூன்று சரித்திரகாலங்களைக் கொண்டு அச்சிவனடியார்வாழ்நாளை நாம் தெரிந்துகொள்ளக் கூடும் ; அவையாவன : 1. சம்பந்தரால் சைனசமயத்தினின்றுசைவசமயத் துக்குத் திருப்பப்பட்டபாண்டியன் காலம். 2. சம்பந்தர்க்குச் சமகாலத்தவரான சிறுத் தொண்டரால் வாதாபித்தொன்னகரம் துகளாக்கப் பட்ட காலம், 3. சம்பந்தர் காலத்தவரான அப்பரால் சைனத் தினின்று சைவத்துக்குத் திருப்பப்பட்ட பல்லவன் காலம். இவற்றுள் : முதலாவது :-சம்பந்தமூர்த்தியால் திருத்தி அடிமை கொள்ளப்பட்ட பாண்டியன் , 'நெல்வேலிவென்ற நின்ற சீர் நெடுமாறன்' என்று பெரியபுராண முதலியவை கூறுகின்றன. இந்நூல் 54-ம் பக்கத்திற் குறிக்கப்பட்ட பாண்டியவமிசாவளியில் 4-ம் எண்ணுக்குரிய அரசன் இவனே என்பது சரித்திரவறிஞர் துணிபாகும் ; இதனை, அவ்விடத்து விளக்கியுள்ளேன், இந்நெடுமாறன் ஆட்சி தொடங்கிய காலத்தைத் தெளிவாகத் தெரிய இடமில்லை. ஆயினும், மேற்கூறிய