பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 175 தெளியப்பட்டது. ஆதலின் அன்னோரை நாங்கைவீரர் வென்றவராக ஆழ்வார் கூற இடமே இல்லையெனலாம். இனி, 9-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கி. பி, 804-க்கு அணித்தாக இராஷ்டிரகூட வேந்தனான மூன்றாங் கோவிந்தன் படையெடுத்து வந்து, பல்லவ மல்லன் மகன் தந்திவர்மனை வென்று கச்சியைக் கைப் பற்றினான் என்றும், அதனால் அத்தந்தியின் ஆட்சியே நிலைகுலையத் தென்னாட்டிற் பல்லவாதிக்கம் குறைய லாயிற்றென்றும் சாஸனம் தெரிவிக்கின்றது. இதனால், வெற்றியாளனான அவ்விரட்ட வேந்தனை யும் 'வடவரசு' என்று ஆழ்வார் கூற இடமில்லையாம். ஆகவே 8-ம் நூற்றாண்டிடையினும், 9-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தும் நிகழ்ந்த வடவர் படை, யெடுப்புக்களைப் பற்றியதன்று மேற்குறித்த ஆழ்வார் வாக்கென்பது தெளிவாகும். இனி, திருமங்கையாரின் முற்பகுதிக் காலமான 7-ம் நூற்றாண்டிலே வடவேந்தர் படையெடுப்புக்கள் மும்முறை நிகழ்ந்துள்ளன. அவற்றுள் : முதலாவது : சளுக்கிய வேந்தனான இரண்டாம் புலகேசி, மகேந்திரவர்மன் என்ற பல்லவன் காலத்து நடத்திய போரெழுச்சி, இரண்டாவது: மேற்கூறிய புலகேசி, மகேந்திர பல்லவன் மகன் நரசிம்மவர்மன் காலத்து நடத்திய போரெழுச்சி, மூன்றாவது: மேற்படி புலகேசியின் மகன் முதல் விக்கிரமாதித்தனது தென்னாட்டுப் போரெழுச்சி. இவற்றுள்: 1. Ind. Ant. Vol. iv, p. 155-127.