பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

180 ஆழ்வார்கள் காலநிலை வந்தவன், சம்பந்தமூர்த்திகள் காலத்தவனான நெல்வேலி வென்ற நெடுமாறனாதல் வேண்டும். அவ்வடவேந்தனைப் பரமேசுவரவர்மன் பெருவளநல்லூரில் முறியடித் தோட்டிய காலமான 674-ம் ஆண்டு, இந்நெடுமாற னுக்கும் உரியதென்பது மேலே விளக்கப்பட்டது. இப்பாண்டியன் சேரனுடன் பலபோர்கள் . புரிந்து அவரது கொங்கு நாட்டின் பெரும் பகுதியைக் கைப் பற்றியவன் என்பது களவியலுரை வேள்விகுடிச்சாஸன முதலியவற்றால் தெளிவாகின்றது. பெருவீரனான இந்நெடு மாறனது ஆட்சிக்காலத் தில், விக்கிரமாதித்தன் தன் குலப் பகைவரது ஆதிக் கத்தைத் தொலைக்க வேண்டிச் சோணாட்டுள் பிரவேசித் ததும் தங்கிய பாடி உறையூராயின், பாண்டியனா திக்கம் ஓங்கிநின்ற கொங்குநாட்டின் வழியாகவே அவன் ஆங்குப் புகுந்த வனாதல் வேண்டும். படை. யெடுக்கும் வேந்தர் தென்னாட்டுட் புகுதற் குக் கொங்கு வழியே சௌகரிய மானதும் பழைமை யானதும் ஆகும், அதனால் அவ்விக்கிரமாதித்தன் பிர வேசமும் அப்பாண்டியன் அனுமதி பெற்றோ அன்றி அவனைப் போரில் வென்றோ நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது திண்ணம். சாஸனங்களில் பாண்டியனுடன் பகைமை கொண்டு வந்தவன் அவ்வட வேந்தன் என்ப தற்கு ஒரு குறிப்புமில்லை. அவனது படையெடுப்பைக் குறிப்பிடும் கத்வால் சாஸனப் போக்கை நோக்குமிடத்து, சோணாட்டுப் பிர வேசத்துக்குத் தடையாது மின்றி செளக்கரிய மான நிலையில் அவன் புகுந்து ரையூர்த் தென் கரையில் தங்கிய செய்தி வெளியாவதால் அந்நிலைமை பாண்டி 1. Ep. In Vol X_p. 100.