பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

184 ஆழ்வார்கள் காலநிலை முதலிற் பிறகிடச் செய்து, பின் வடவரசனையும் ஓட்டி ' யவர் அவ்வீரர் என்பதே கருத்தென்க." மாவருந் திண்படைமன்னை வென்றி கொள்வார்' 1 துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர்' என்று ஆழ்வார் அவ்வீரர்களைப் பாடுவதினின்று, தக்கதுணை யொடு வந்த அவ்வேந்தன் பெருமையும், அவன் அதி விரைவில் தோற்றோடிய சிறுமையும் நன்கு புலனாகும். விக்கிரமாதித்தனை ஒருகந்தைத் துணியை மட்டும் கட்டி மூடிக்கொண்டு போரினிடையே ஓடச்செய்தான் என்று, பரமேசுவரவர்மனைக் கூரம்சாஸனம் விரிவாகப் புகழ்வதும் இங்கு ஒப்பிட்டறியத் தக்கது. 1. மேற்கூறிப்போந்த சரித்திரச் செய்திகள், பிற் காலத்து அறிய இடமில்லாமற் போனமையால், ஆழ்வாரது இப்பாசுரத் தொடாக்கு வேறு பொருள் பூர்வவியாக்யானங் களிற் கூறப்பட்டுள்ளது. 2. S. I. 1. Vol. I. p. 153. 3. விக்கிரமாதித்தனுக்கு விரோதமாக மூவரசர் ஒன்று கூடியிருந்தனர் என்றும், அவரை திரைராஜ்யபல்லவர், என்றும் சாஸனங்கள் கூறுகின்றன. (E. 1.1X, 100; E, C. VIII, E. pp.. 175-6) அம்மூவராவார், பல்லவனொரு வனுடன் பாண்டியனும் சிங்களவேந்தனுமாவர் என்பதும். இம்மூவருமே விக்கிரமாதித்தனைப் பெருவள நல்லூர்ப் போரில் எதிர்த்தவர்கள் என்பதும் டாக்டர் தூப்ராயில் துரை கருத்து. மூவரசர் ஒன்றுகூடித் தன் தந்தை புலகேசி ஆண்ட நாட்டைக் கவர்ந்தனராக அதனை அவன் மகன் விக்கிரமாதித்தன் பட்டமடைந்ததும் போராடி மீட்டுப் பெற்றான் என்று அச்சாஸனங் கூறுகின்றதேயன்றி, தென் னாட்டிற் படையுடன் வந்த அவ்வேந்தனை எதிர்க்கவேண்டி அம்மூவருந் திரண்டுகூடினர் என்றேனும், அம்மூவர் இன்னார் என்றேனும் அது கூறவில்லை. 'திரைராஜ்யபல்லவர்'