பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

186 ஆழ்வார்கள் காலநிலை 'ஒண்டிறல் தென்னனோட(வ்) வடவர சோட்டங்கண்ட திண்டிற லாளர் ‘மாவருந் திண்படை மன்னை வென்றி கொள்வார்' ‘துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர்' எனப் புகழப்பட்டவர், அப்பரமேச்சுரனுக்குப் பெருவள நல்லூர் வெற்றியைத் தந்துதவிய பெருவீரர்களே என்று கருதல் சிறிதும் தவறான ஊகமாகாமை காணலாம். முன்பு யான் கூறிப் போந்தவற்றினின்று, 8-ம் நூற்றாண்டினும் 9-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தும் படையெடுத்து வந்த வடவேந்தரெல்லாம் பல்லவர்களை வென்று போந்தவரென்பது தெளிய அறியப்பட்டது. எனவே, 7-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த வடவர் படை. யெடுப்புக்களில், 674-ல் சோணாட்டுப் பிரவேசித்த விக்கிரமாதித்தன் படையெடுப்பே ஆழ்வார் திருவாக்குக்கு இலக்காவதாம். அங்ஙனம் இலக்காகிய படையெடுப்பின் காலம், சம்பந்தர்க்கும் ஏற்றதா யிருத்தல் அறியத்தக்கது. இவற்றால், ஞான சம்பந்தரை ஆழ்வார் காலத்தவ ராகக்கூறும் திவ்யசூரிய சரித முதலிய நூல்களின் கருத்துப் பெரிதும் பொருந்துதல் - கண்டுகொள்க" இனி நந்திவன்மனது ஆட்சியிடைக் காலமான 744-754-ல் விளங்கியவரென்று மேலே கூறிப்போந்த திருமங்கை மன்னனை, உத்தேசம் 660-ல் அவதரித்தவ ராகக் கொள்ளின், 84-94 வயது இவர் வாழ்ந்தவர் என்பது பெறப்படும், தாம் பாடிய வதரி திருநறையூர்ப் பதிகங்களில்,தாம் மூப்பால் முதிர்ந்து வரும் நிலைமையை இவர் குறிப்பிடுதலால், நெடுங்காலம் இந்