பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 187 நிலவுலகை அலங்கரித்திருந்தவர் இப்பெரியார் என்பது அறியப்படும். வடவரசோட்டங்கண்டவர்களும், தம் மூர்ப் பக்கத்தவருமான நாங்கை வீரர்களைத் திருமங்கையார் நேரில் அறிந்தவர் என்பது அவர் திருவாக்குக்களால் தெளிய அறியப்பட்டது. அவ்வடவரசனது படையெடுப்புக் காலத்தே ஆழ்வார் 14-16-வயது இளைஞராகவும், உத்தேசம் 670-ல் அவதரித்த சம்பந்தமூர்த்திகளை இவர் சந்தித்தகாலத்தே 25-வயதினராகவும் கொள்வோமாயின் யாவும் ஒருவாறு பொருந்தத் தடையில்லை. பாங்கை வீரர்கள் பல்வேறு காலங்களில் இவரால் வெவ்வேறு பதிகங்களிற் பாடப் பட்டவரென்பதும் அறியத்தக்கது. ஏழாம் நூற்றாண்டில் சைன பௌத்தர்கள் தென்னாட்டில் மேலோங்கியிருந்தவர் என்பதும், அப்பரும் சம்பந்தரும் வாதாடி அவரது ஆதிக்கத்தைத் தொலைத்தவர்கள் என்பதும் சரித்திரப் பிரசித்த மானவை. திருமங்கை மன்னனும் சோழன் முன்னிலையில் புத்தர் முதலிய புறச்சமயத்தவரை வாதில் வென்றனர் என்று திவ்யசூரி சரிதங்கூறுவதோடு (பக்-138--140), அப்பர் சம்பந்தர் பாடல்களிற்போலத் தங்காலத்தே சைனபௌத்தர்கள் வைதிக சமயத்தவரை இகழ்ந்தும் இடுக்கண்விளைத்தும் வந்தவர்கள் என்பதனை-- பிச்சச் சிறுபிலிச் சமண்குண்டர் முதலாயோர் விச்சைக் கிறையென்னும் மவ்விறையைப் பணியாதே (பெ. தி. 2. 6, 5) "தருக்கினாற் சமண்செய்து சோறுதண் டயிரினாற் றிரளை மிடற்றிடை நெருக்குவார் (ஷை, 2. 1, 7.)