பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

200 ஆழ்வார்கள் காலநிலை குரியனான பாண்டியனை அவன் போரில் தோற்பித்தவன் என்பதும் தொனிக்கின்றன. இத்தென்னாட்டு வெற்றி பெற்றவன் திருமா லடியனான பல்லவ மல்லனாதல் வேண்டும்; பல்லவன் மல்லையர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம்' என்று இவனையே பொதுப்படப் பல்லவன் என்று மேலைத் திருப்பதிகத்துக்கும் இவ்வாழ்வார் சிறப்பித் திருத்தல் ஒப்பிடத் தக்கது. சித்திரகூடத்துத் திருமால் தில்லைவாழந்தணர் களால் நாளும் விதிப்படி ஆராதிக்கப்பெற்றுப் போற்றப்படுபவர் என்பது"மூவா யிரநான் மறையாளர் நாளும் முறையால் வணங்க வணங்காய சோதி தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திர கூடஞ்சென்றுசேர் மின்களே" (3, 2, 8) என்ற இப்பெரியார் திருவாக்கால் விளங்கும். தில்லை மூவாயிரவர் இவ்வாறு திருமாலடியராய் வழிபடுந் திறத்தை“தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே." (10,2) என்று குலசேகரப்பெருமாளுங் கூறியருளுதல் காண்க. இதனால், சிவனடியார்களால் முற்படச் சிறப்பிக்கப் பெற்ற தில்லைவாழ்ந்தணர்". பண்டைக்காலத்தே 1. தேவாரம், திருத்தொண்டத்தொகை, 1.