பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

202 ஆழ்வார்கள் காலநிலை இவரன்றித் தம்நாளிற் பிரபலராயிருந்த தமிழரச ரெல்லாம் திருமால்பத்திமையிற் சிறந்திருந்தவர் என்பதைத் திருமங்கைமன்னன், 'பரனே! பஞ்சவன் பூழியன் ! சோழன் பார்மன்னர் மன்னர் தாம்பணிந் தேத்தும் வரனே' (பெரிய திருமொழி, 7, 7, 4). என்பதனால் குறிப்பிடுகின்றார். இவ்வாறு அவ்வேந்தர்கள் திருமாலடியாராக விளங்கிய காலம், இப்பெரியாரின் முற்பகுதிக்காலமான 7-ம் நூற்றாண்டாதற்கு ஏற்புடைய தன்று . மகேந்திரவர்மன் காலமுதலாக (600) இராஜசிம்மன் காலம் (690)முடிய இருந்த பல்லவர்கள், விஷ்ணுசமய விரோதிகள் அல்லராயினும், திருமாலடியார் என்று சிறப்பிக்கத்தக்கவர் ஆகார். அவ்வேழா நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த பாண்டியனோ சம்பந்தர்காலத் தவனான நெல்வேலி வென்ற நெடுமாறன் ஆவன். இவன் பரமசைவன்' என்று தெரியவருதலால், இவனை 1. பௌழியன்' என்பது இப்போதைப் பாடம். பூமி நாட்டுக்குத் தலைவனானமைபற்றிப் பூழியன் என்று சேரர்க்கு ஒரு பெயர் பழைமையாகவே வழங்குதலாலும், பௌழியன் என்று அவர்க்கு நூல்வழக்கின்மையாலும் பூழியன், என்றே ஈண்டுப்பாடங்கொள்ளப்பட்டது. 2. சுந்தரமூர்த்தி நாயனார், அறுபத்த மூவருள் ஒரு வராகத் திருத்தொண்டத் தொகையிற் பாடியவாறே --நறையாற்றகத்து வென்றான் முடிமேல்- நின்றான் மணி கண்டம்போல் " (256), “விழிஞத்து வென்ற-வல்லியல் தோண்மன்னன் சென்னி நிலாவினன் வார்சடையான்”(279) என இந்நெடுமாறனைச் சிவபத்தனாகவே பாண்டிக்கோவைப் பாடல்கள் கூறுதலுங்காண்க. (இறையனார் களவியலுரை.)