பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 205 விஷ்ணுபக்தி மிக்கவராயிருந்தனர் என்ற செய்தியைத், திருமங்கை மன்னன் குறிப்பிடுதல் அறியக்தக்கது. மேற்கூறியபடி, திருமங்கைமன்னனாற் புகழப்பட்ட அரசர்கள் திருமால்பத்திமை மிக்கிருந்தவர் என்று விளங்குதலினின்று, பிற்காலத்தவர் கொண்ட மதவை ராக்கிய நிலைமையையேனும், சமய விரோதக் கருத்தையேனும் அவர்கட்குங் கொண்டு நோக்குதல் தகுதியன்று. வெறுப்பற்ற நிலையினர் பழைய அரசர் பெரும்பாலாரும் வைதிகசமயங்' களுள் எதனைத் தழுவியவராயினும் அதுபற்றிப் பிற் காலத்து வேந்தர் சிலர் போலப் பிற வைதிகசமயக் கடவுளரிடத்து வெறுப்புக் கொள்ளாது, அவர்க்குக் கோயிலெடுத்தும் வழிபட்டும் போந்தவர்களே. கோச்செங்கணான், மகேந்திரவர்மன் முதலியோர் இத்தகையோராதல் காண்க, வைதிகரிடம் மட்டுமன்று: அவைதிகரான சைனபௌத்தர்கள்பாலும் அம்முறை யையே பண்டை வேந்தர் கொண்டொழுகியவராவர். சிவபாதசேகரன் எனப்பட்ட முதல் ராஜராஜசோழன் நாகைப்பௌத்த விஹாரத்தை அபிமானித்து ஆதரித் ததும், அவன் சகோதரி குந்தவை சைனப்பள்ளிகட்டிப் போற்றியதும் இதற்குச் சான்றுகளாம். ஆகவே, சைவச் சார்புடைய வேந்தர் திருமால்கோயில் முதலியன நிருமித்துவணங்கலும், வைணவச்சார்புடைய வேந்தர் 1. குந்தவையால் பிரதிஷ்ஷடிக்கப்பட்டது. வட ஆர்க்காடு ஜில்லாவில் திருமலை (வைகைமலை) யிலுள்ள ஜினாலயமாகும். (Insc, of the Madras Presidency. NA 38}}