பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

222 ஆழ்வார்கள் கால நிலை ‘நீர்ப்பெயற்று' என்பதற்கு–'நீரின்வளம் பெய்தலை யுடையது' என்று வலிந்து பொருள் கொள்ளலாம். கடன்மல்லை என்ற பெயரும் இப்பொருட்டே; கலங்க ளியங்கு பல்லைக் கடன்மல்லை" என்றார் திருமங்கை மன்னனும், இனி, நீர்ப்பெயர்த்து என்ற சிறந்தபாடமும் மகாமகோபாத்தியாய - ஐயரவர்களாற் கீழ்க்குறிப்பிற் காட்டப்பட்டுள்ளது; ' நீரின் பெயரை உடையது' என்பது இதன்பொருள். ஈண்டு நீர் - கடல் (பிங் கலந்தை ); இதனை. * நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் (பட்டினப் பாலை, 185) நீரொலித் தன்ன நிறைவேற் றானையோடு (மதுரைக்காஞ்சி, 369) என்பவற்றாலும் அறிக. நீரின் பெயருடையது' எனவே, கடன் மல்லை' என்பது குறிப்பிக்கப்பட்டபடியாம். ஊர் முதலியவற்றை அவற்றின் பரியாயப் பெயர்களாற் குறிப்பிடுவது பண்டையோர் கொண்ட முறையாகும். இச்செய்தி: 1. வஞ்சிமாநகரை:- “ பொற்கொடிப் பெயர்ப்படு உம் பொன்னகர்' (மணிமே. 26-92; 28-101) என்றும், 2. காவிரிப்பூம்பட்டினத்தை:- கவேரகன்னிப் பெய ரொடு விளங்கிய மூதூர் (க்ஷ. 95-52) என்றும், 3. எயிற்பட்டினத்தை:- மதிலொடு பெயரிய பட்டினம்' (சிறுபாண். 152-3) என்றும், 4. கிரவுஞ்சகிரியை:-குருகுபெயர்க் குன்றம்' (சிலப், 24. ('சரவண') என்றும், 5. வீட்டின் உத்தரத்தை:-நாளொடு பெயரிய விழு மரம்' (நெடுநல், 22) என்றும்,