பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

236) ஆழ்வார்கள் காலநிலை கூறுமுறை பிற ஆழ்வார்களிடம் அருகியே காணப் படும். திருமங்கையார் மட்டும் அரசர் செல்வத்தை அடுத்தடுத்து இவ்வகை எடுத்து மொழிவது--தங்காலத் துப் பேரரசரான பல்லவர் அடைந்திருந்த பெருநிலை, அன்னோர் திருமாலைப் பூசித்துப்பெற்ற பேறே என்ப தைப் பிறர்க்கு அறிவுறுத்தி, அத்தகைய பெரும்பதவி தம்பதிகம் பாடுவாரும் அடைக' என்று திருவுள்ளங் கொண்டென்றே சொல்லலாம். திருமாற் கடிமை செய்வார் அவனமிசமான திரு வுடைமன்னராகத் தடையில்லை என்பது இவர் உள்ளக் கருத்தென்க.! | முன்பு யான் குறித்துப் போந்தபடி, 'பப்ப பட்டா ரகர்' என்று இவ்வாழ்வாரைத் தங்காலத்து வேந்தரும். அவ்வேந்தரது ஸ்ரீவைஷ்ணவத்திருவை இவ்வாழ்வாரும் பா, ராட்டிச் சிறப்பிப்பது அவர்கள் கால நிலைமைக்குப் பெரிதும் ஏற்புடைத்தாதல் அறியத்தக்கது. பல பெயர் மன்னர் இனித் திருமங்கை மன்னனுக்குப் பரகாலன், கலியன், கலிகன்றி, அரட்ட முக்கி என்பன திருநாமங்கள் என்பது அவர் பாசுரங்களினின்று தெரியலாகும். பரகாலன் பன்பதற்கு பகையரசர்க்கு யமன் போன் றவன்' என்பது பொருள். கலியன் என்பது தானைத் தலைவன், படை வீரன் என்ற பொருளுடையது. “மானவர் வீரர்...ஆனகலியர், தானைத் தறுகணாளர் பெயரே 1. 'திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேனே யென்னும்' என்பது திருவாய்மொழி.