பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 237 என்பது திவாகரம்.' அருண்மாரியாகிய நம் கலியனைப் போலவே, முதற்பராந்தக சோழனது சேனாதிபதி யொருவன் அருணீதிகலியன்? என்ற பெயர்பெற்றிருத் தல் இங்கு ஒப்பிடத்தக்கது. இதனாலும் திருமங்கை. மன்னன் பேரரசற்கு மகாசாமந்தராக இருந்தவரென்பது, தெள்ளிதாம், இனிக் கலிகன்றி என்பதன் பொருள் மேலே விளக்க கப்பட்டது. கலித்வம்ஸ:' 'கலிவைரி' என்பன இதன் வடமொழிப் பெயர்ப்பாக நூல்கள் கூறும். அரட்ட முக்கி என்பதற்குக் குறும்பரசர்களை ஒடுக்குபவன் என்பது பொருளாம். (அரட்டு--குறும்பு.) 'அரட்டடக்கிதன் னாரூரடைமினே" என திருநாவுக்கரசரும் இதனையொத்த தொடரை: வழங்குதல் காண்க. 'அரட்டமுக்கிதாசன்' எனப் பின் னோர் பெயர் பூண்டிருத்தல், அக்காலத்திருந்த ஆழ் வாரது இப்பெயர் வழக்கின் மிகுதியைக் குறிப்பிக் கின்றது. • பெரியாழ்வாரின் அருமைத் திருமகளாரான ஸ்ரீ கோதைப் பிராட்டியாரை அழகிய மணவாளன் திருமணம்புரிந்து தம் பெரும் பரிவாரங்களுடன் திரு. வரங்கம் நோக்கிச் செல்லும் இடைவழியில், மங்கை காவலர் அவர்களை வழிமறித்து வாள்வலியால் அப் பெருமானிடமிருந்து திருமந்திரோபதேசம் பெற்றனர் 1. மக்கட் பெயர்த்தொகுதி-சூத். 108. 2. Inscriptions of the Madras Presideney, Tj No. 1850. | 3. தேவாரம், திருவாரூர்த் திருக்குறுந்தொகை, அப்.5.. 4. S.I.I. Vol, ii, PP. 80,84.