பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

238 ஆழ்வார்கள் காலநிலை என்ற வரலாறு திவ்ய சூரிசரிதத்துக் கூறப்படுதலின், பெரியாழ்வாரும் அவர் திருமகளாரும் விளங்கிய காலத் தில் இவ்வாழ்வாரும் வாழ்ந்தவர் என்பது தெளிவாம். பின்பெழுந்த குருபரம்பரை முதலிய சரித்திர நூல்கள், இப்பெரியார் எல்லா ஆழ்வார்கட்கும் பிற்பட்டவர் என்று கூறுகின்றன. ஏனையடியார்களாற் பாடப் பெறாத திவ்யதேசங்கள் பல இவரால் மங்களாசாஸனஞ் செய்யப் பெற்றிருத்தலே இவர் பிற்பட்டிருந்தவர் என்ப தற்குச் சான்றென்று கூறுவாருமுண்டு. ஆழ்வார்களிற் பலரை ஒரு காலத்தவராகவே திவ்ய சூரிசரிதம் தெளிவாகக் கூறுதலின் அவர்களிற் பெரும் யாலோர் பரமபதம் பெற்ற பின்பும் வாழ்ந்தருளியவர் திருமங்கைமன்னன் என்றே, மேற்குறித்த சரித்திர வேறுபாடுகளை நாம் இணைத்துக் கொள்ளத்தகும். அஃதாவது- முன்னர்க் கூறிப் போந்தவாறு, 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவதரித்து, 8-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் திருநாடலங்கரித்தவர் இவ்வாழ்வார் என்பதாம். திருமங்கையாரது திருவாக்குமுழுதும், 'செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய' அமுத கவிகளாகவே திகழ்தல் காணலாம். "செந்திறத்த தமிழோசை" யின்பமும் ஆற்றொழுக் கான போக்கு முடையவாய் மிளிர்வன, இவர் பாசுரங் கள் இருந்தமிழ் நூற்புலவன்' என்றுதம்மைக் கூறிக் கொண்டவாறே, கல்விக் கடலனையவர் இப்பெரியார் என்னத் தடையில்லை. இச் சிறப்புப் பற்றியே- கலைப் 1. திவ்ய சூரி சரிதம், பக். 121-124 2. பெரிய திருமொழி, 1, 7, 10.