பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

244 ஆழ்வார்கள் காலநில. செய்தியைத் தொண்டரடிப் பொடிகளும் கூறுவது அன்னோரெல்லாம் சம காலத்தவரே என்பதை உணர்த் துவதெனலாம். தொண்டரடிப் பொடிகள் அருளிய திருமாலையின் 17-ஆம் பாசுரத்தே "சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்கமா கோயில் கொண்ட கரும்பிளைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே" எனவரும் பின்னிரண்டடிகள், திருமங்கை மன்னன் அருளிய திருக்குறுந்தாண்டகத்து 12 ஆம் பாசுரத்தின் பின்னடிகளாகச் சிறிதும் வேறுபாடின்றியிருத்தல் ஈண்டு ஒப்பிடத்தக்கது, இது, முன்னோர் மொழியையும் பொருளையும் பொன்னேபோற் போற்றிக் கொண்ட தாகும். எட்டாம் அதிகாரம் திருப்பாணாழ்வார். இவ்வாழ்வார் சோழராசதானியாகிய உறையூரிலே அந்திம குலமான பாணவமிசத்தில் அவதரித்தரு ளியவர். இப்பெரியார் காவிரியின் தென்கரையோரத்தே திருவரங்க முடையாரான பெரிய பெருமாளிடத்தே பரமபக்தியுடையராய் அப்பிரானையே தியானித்து நின்று கொண்டு, அப்பெருமான்மேல் செவிக்கினிய பாடல்களை நாளும் யாழிலமைத்துப்பாடி உருகிவந்தன