பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

17 முன்னுரை 1 “ மடியிலா மன்னவ னெய்தும் அடியளந்தான் தா அய தெல்லா மொருங்கு" (610). “ தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு" (1103) என்று கூறுதல் அவருள்ளக்கிடையைத் தெள்ளிதிற் புலப்படுத்தக் கூடிய தன்றோ ? இவற்றுள், முன்பாட்டில் வரும் அடியளந்தான் தா அயதெல்லாம்' என்றதொடர், 'அசுரர்க்கு உரிமையானதைத் தன்னுரிமையாக்க வேண்டித், திருமால் தன்னடியால் அளந்து பெற்ற எல்லாவுலகும்' என்ற கருத்துடனிற்றலும், இரண்டாங் குறள் - இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்தபின் தலைவனது தளர்ந்தநிலையை நோக்கி, 'நிரதிசயவின்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது' என்ற பாங்கற்கு அத்தலைவன் கழறிக் கூறிய கூற்றாக நிற்றலும் அறியத்தக்கன. இக்குறள்களினின்றும், இலீலாவிபூதி நித்திய விபூதி என்ற இருவகைப் பெருஞ்செல்வங்கட்குந் தனியிறைமை திருமாற்கேயுரியதென்ற வைஷ்ணவ சமயக் கொள்கை, வள்ளுவனார் திருவுள்ளத்துக்கும் ஒத்ததென்பது நன்குபெறப்படும். 1. “ தன்னடியளவானே எல்லா வுலகையும் அளந்த இறைவன கடந்த பரப்புமுழுதையும், மடியிலா அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும்” என்பது பரிமேலழகருரை, '2. "ஜம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம்விரும்பும் மகளிர் மெல்லிய தோளின் கட்டுயிலுந் துயில் போல வருந் தாமலெய் தலாமோ, அவற்றைத் துறந்த தவயோகி களெய்தும் செங்கண்மாலுலகம்” என்பது பரிமேலழகருரை.