பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலசேகரப்பெருமாள் 261 "ஆதியந்த வுலாவாசு பாடிய சேரர்கொங்குவை காவூர்நன் னாடதில் ஆவி நள்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே (திருப்புகழ்) எனச் சேரமான் பெருமாளுக்கு உரிமையுடையன வாகவே கொங்கின் பிரிவான வைகாவூர் நாட்டையும் ஆவிநன்குடியையும் அருணகிரிநாதர் பாடுதலும் இங் கறியத்தக்கது. இதனால் 15ஆம் நூற்றாண்டுவரை சேரதேசமாகவே கொங்குநாடு கருதப்பட்டுவந்தமை தெளிவாதல் காண்க. கொல்லிநகர்க் கிறையான நம் குலசேகரப் பெருமாள் கடன்மலைநாடான மலையாள தேசத்துக்கும் அரசராயினும், ' அந்நாட்டுப் பரிசயம் மிகுதியும் உடையவரல்லர் போலவே தோற்றுகின்றார். பரிசய முள்ளவராயின், அந்நாட்டுத் திருமால் திருப்பதிகளை யெல்லாம் விடாது பாட வேண்டியவ ரன்றோ? அங்ஙனம் பாடாததோடு, திருவரங்கம், திருக்கண்ணபுரம், தில்லைத் திருச்சித்திரகூடம் போன்ற சோணாட்டுத் தலங்களையே இவர் அபிமானித்திருத்தலின், கீழ்நாடே இவரது பழக்கத்துக்குப் பெரிதும் உரியதாயிருந்த தென்றும் தோற்றுகின்றது. வித்துவக்கோடு என்ற பெயருடன் மலைநாட்டில் இன்றுமுள்ள திருப்பதி, குலசேகராழ்வாராற் பாடப் பெற்றுள்ளதே எனிற் கூறுவேன். ஆழ்வார் பாடிய வித்துவக்கோடு மலைநாட்டதே யாயின், தென்பாண்டிநாட்டவராய் அம்மலையாளத் திருப்பதிகளையெல்லாம் விடாதுபாடிய நம்மாழ்வார்