பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலசேகரப்பெருமாள் 269 வழியாகச் சேரர்க்குச் சந்திராதித்தகுலம் வந்ததாக வேண்டும். அன்றேல், பாண்டிய சோழ வமிசங்களி னின்று சேரர் ஓரொருகாலத்தே தெரிந்தெடுக்கப்பட்ட செய்தி கேரளவரலாறுகளால் அறியப்படுதலின், அம் முறையில் இம்மரபு அமைந்ததாயினும் ஆம், எவ்வகையினும், கூடல் நாயகன்' கோழிக்கோன் என்று ஆழ்வார் கூறுகின்றவை, பாண்டிய சோழ நாடாட்சியில் தமக்கிருந்த தலைமைபற்றியன என்பதி னும், அவ்விருவர் மரபுடனும் தங்குலத்தவர்க்கிருந்த தொடர்புபற்றியன என்று கொள்ளுதலே பெரிதும் பொருத்த மெனலாம். சளுக்கியவமிசத்தவனாய்ச் சோழகுலத்துப் புக்க முதற்கு லோத்துங்கன் அவ்விருமரபினர்க்கும் தனிப் புதல்வனாயிருந்தமையால் அவன் தந்தைவகையார் சர் திரகுலத்தவனாகவும் தாய்வகையார் சூரியகுலத்தவனா கவும் அவனைப் பாராட்டலாயினர் என்பது-- ( திங்களி னிளங்குழவி செம்மலிவ னென்றும், செய்யபரி திக்குழவி யையனிவ னென்றுந் தங்களின் மகிழ்ந்திரு குலத்தரசர் தாமுந் தனித்தனி யுவப்பதொர் தவப்பயனு மொத்தே எனச் செயங்கொண்டார் 2 பரணியில் அழகுபெறப் பாடுதலால் அறியலாம். அத்தகைய நிலைமையே குலசேக ரரும் கொண்டனராதல் வேண்டும். 1, எங்கள்குலத் தின்னமுதே யிராகவனே” (பெரு மாள் திரு. 8-3) என்று இவ்வாழ்வார் அருளியதனுள், 'எங்கள் குலம்' என்பதற்குப் பொதுவாக க்ஷத்ரியவருணம் என்று பொருள் கூறப்படுமாயினும், சிறப்பாகச் சோழர்க் குரிய சூரியவமிசம் என்று பொருள்கோடலும் இயைபாதல் காண்க. 2. கலிங்கத்துப்பரணி, அவதாரம், 7.