பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சடகோபரும் அவர் அருளிச்செயல்களும் 277 நாளும் அப்பெரியார் இருவருக்கும் அவதார காலமா ய்மைந்த ஒப்புமையும் குறிப்பிடத் தக்கது. இமையச் சார்பான உத்தர கோசலத்திலே அரச வருணத்து உதித்த சாக்கிய முனிவரின் ஞான வெள்ளம், தெற்கே குமரிக் கடலையும் கடந்து சென்றது. அம்முறையே குமரிச் சார்பான தென்பாண்டி நாட்டு வேளாளர் மரபில் உதித்த சடகோப முனிவரின் ஞானப் பெருக்கு, கங்கை நாடுகளினும் பரவியதாகும். இம்முனிவர் விதைத்த ஞானப் பயிரின் பயனே (இராமநுஜ சித்தாந்தம்' என்று கூறுவர். அதனாலன்றோ இப்பெரியாரை ஸ்ரீ வைஷ்ணவ குலபதி' என்றும், இவரது அருளிச் செயல்களைத் ' தமிழ் மறை' என்றும் போற்றுவதோடு, கோயில்களிலும் இல்லங்களிலும் இவரைத் தம் தொழுகுலமாக வைத்து நித்தமும் வழிபடுவதும் வைணவ சமயத்தார்க்கெல் லாம் பொதுக்கடமை யாயிற்று. இவ்வாழ்வார்மூலம் விளைந்த ஞானமெல்லாம், கங்கை நாடுகளிலும் பரவியதென்பது புனைந்துரை யன்று. இன்றைக்கு 250 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த வரும், ஹிந்தி-ராமாயண ஆசிரியராய் வடநாட்டா ரெல்லாராலும் போற்றப் படுபவருமான ஸ்ரீ துளஸீ தாசரைப்பற்றி அறியாதார் இல்லை. இப்பெரியார் ச... கோபரைத் தலைவராகக் கொண்ட வைஷ்ணவ ஆசாரி யரின் சம்பந்தம் பெற்றவரென்பது பிரமாணமூலம் தெரிய வருகின்றது. இக்காலத்தும் வடநாட்டு மடாதி 1. 1957ஆம் ஆண்டு கதேசமித்திரன் தீபாவளி மலரில் வெளிவந்தது இக் கட்டுரை. 'ஆழ்வார்களின் காலநிலை' நூலில் பன்னிரு ஆழ்வார்களுள் ஸ்ரீ சடகோபர், மதுரகவி இருவரையும் பற்றிய ஆராய்ச்சி முன்னர்ச்சேராத குறையை இக்கட்டுரை போக்குகிறது.