பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சடகோபரும் அவர் அருளிச்செயல்களும் 279 பருவத்தே அவாவற்று வீடு பெற்றருளினார் என்பது அவர் சரித்திரச் சுருக்கம், வாழ்ந்த காலம் இவ்வாழ்வார் வாழ்ந்த காலம் இன்னதென்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆயினும், சரித்திர முறையில் ஆராயுமிடத்து கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமே இவருக்கு உரியதாகக் கொள்ளத்தகும். இதன் காரணங்களை இங்கு விரிப்பிறி பெருகுமாதலால், தனியே வேறிடத்தில் வைத்துக் கூறு வேன். | இப்பெரியாரின் வரலாறும் அருளிச் செயல்களும், மக்களின் ஆன்ம ஞானக் குறைவாலோ, புற மதத்த வரின் சூழ்ச்சியாலோ சிலகாலம்வரை வழக்கற்றிருந் தன என்றும், பின் 9-10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீமந் நாதமுனிகள் என்ற ஆசாரியத் தலைவர் திருவாய் மொழி முதலியவற்றைக் கண்டுபிடித்து இயலிசைகள் வகுத்துப் பிரபலம் பெறச் செய்தனர் என்றும் குரு பரம்பரைகள் கூறுகின்றன. சடகோபருக்கு மாறன், பராங்குசன் என்ற வேறு திருநாமங்களும் உண்டு. மாறன் என்பது இவர் தந்தை பெயருடனிணைந்து காரிமாறன் எனவும் வழங்கும். முன்னோரான திருமாலடியார்களை ஆழ்வார் என்று அழைப்பது வழக்கு, ஏனை ஆழ்வார்களினும் தலைமை யும் பெருமையும் உடையவரானதால் நம்மாழ்வார் என்ற திருநாமம் இவருக்குச் சிறப்பாக உரியதாயிற்று. நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை - என்ப தவரவர்தம் ஏற்றத்தால் (உபதேச ரத்த மாலை) என்பர் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.