பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

298 ஆழ்வார்கள் காலநிலை என்ற அடிகளில் துவரையென்னும் அதில்' என்று பிரித்துக் கொண்டு அதற்கேற்பப் பொருளும் கூறப் படுகின்றது. ஆனால் மோனை நயமும் பொருட்சிறப்பும் கொண்ட பழம்பாடம் துவரையென்னும் மதில் நாயகர்' என்பதாகவே கொள்ளத்தகும். இத்தொடர்க்கு 'துவார கையென்ற மதிலரணுள்ள நகரத்துக்கு அரசர்' என்பது பொருளாம். திரிபுரங்களை, 'எயிற்குலமூன்று' (திருக் கோவை. 36) என்று கூறும் வழக்கும் ஒப்பிடுக. அம்மூ வெயிலையும். இரும்புறுமாமதில் பொன்னிஞ்சி வெள்ளிப் புரிசை” என்று வாதவூரடிகள் பாடியதற்கு (திருக் கோவை, 167)-பேராசிரியர் இரும்பு பொன் வெள்ளிகள் பொருந்திய மதில்களையுடைய ஊரும் (திரிபுரம்)" என்று பொருள் கூறியிருத்தலும் காண்க. மதிபரண்கள் கொண்ட. மூன்றூர்களையுடைய பாண்டியனை 'மும் மதில்வேந்தன்' என்ப (இறை. களவியலுரை. பாட், 252). துவரையைக் கூறுந்தோறும் அதனை மதிற்பெருமை யால் விசேடித்துக் கூறுவர் முன்னோர்: “செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசைத் துவரை” “துன்னரு நீண்மதிற் றுவராபதிக்கிறை' (பெருங்கதை) எனக் காண்க, வடநடமும் வைகுந்தமும் மதிற்று வராபதியும் என்று இவ்வாழ்வாரே அருளிச்செய்தலும் குறிப்பிடத்தக்கது. இப்பாட்டின் 3-ஆம் அடியில் புதுநாள் மலர்க் கமலம்' என்றுள்ளதை; 'புதுநாளமலர்க்கமலம்' என்று கொள்வது சிறக்கும். நாள்மலர்' என்பதாயின், நாள் என்பதே புதுமை குறிக்கும்; அதனால், புதிய தும் தண்டையுடையதுமான கமலமலர் என்ற பொருளில் 'புதுநாளமலர்க்கமலம்' என்ற பாடம் ஏற்புடையதே.