பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

300 -ஆழ்வார்கள் காலநிலை என்பது இப்போது ஓதும் பாடம். இங்கு ஒற்றுமிக வேண்டுதலால் 'துயிலெழப்பாடுவான்' என்று பதிப் பிட்டாரும், கலியோசை நயங்குன்றுவதுகண்டு, 'துயி லெழல்பாடுவான்' என்று பாடங் கூறுவாரும் உளர். ஆனால், இவற்றில் எதுவும் பழம்பாடம் ஆகாது. துயில் கொள்ளும் அரசரை வந்திகள் இன்னிசைபாடித் துயி லுணர்த்துதல் மரபு. இது 'துயிலெடைநிலை' என்ற புறத்துறையாகும். “சூதர் ஏத்திய துயிலெடைநிலையும் என்பர் தொல்காப்பியனார் (பொருளதி. 91). பயில்பூம் பள்ளித் துயிலெடை மாக்கள் இசைகொ ளோசையின் இன்றுயி லேற்று என்பது பெருங்கதை (4-6-81). துயில் எடை-உறக்கத் தினின்று எடுப்புதல், எடுப்புதலெனினும் எழுப்புத லெனினும் ஒக்கும். இவ்வொப்புமைபற்றியே, ' துயி லெடைபாடுவான்' என்றிருந்த பழம்பாடம், 'துயிலெழ பாடுவான்! என டகர ழகரங்கேளாடு அபேதமாய்ப் பாடம் மாறியதென்றே கொள்ளத்தகும், 18. நாய்ச்சியார் திருமொழி, 2-ம் பதிகம், 7-ம் பாசுரத்தில், “ஓதமா கடல்வண்ணாவுன் மணவாட்டிமாரொடு சூழறும் ....................எங்கள் சிற்றில் சிதையேலே *என்ற அடிகளுள் 'சூழறும்' என்பது வியாக்யானபாடம், உன் மணவாட்டிமாரொடு சூழறும்-உனக்கு நல்லா ரொடு சூழறுங்கிடாய், இத்தை அழிப்பாயா நில்!' சூழறுகை -- ஆணையிடுகை' என்பன வியாக்யான பந்திகள். இவ்வாறு, ஆணைப்பொருளதாயின், இது "சூளறும்' என்றிருத்தல்வேண்டும். சூள் 'அறுதல்-ஆணை -யறுதியிடுதல், வஞ்சினத்தைச் 'சூளறவு' என்பர் (திருக் கோவை 187). ஆணைப் பொருளில் இச்சொல்' வழங்கு