பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

308 ஆழ்வார்கள் காலநிலை "நரையேற்றான் பாகத்தான்" என்றே சொல்லலாம். நரையேறு-வெண்மைநிறமுடைய எருது. “நரைவிடை நற்கொடியுடையநாதன்" (தேவா. திருநாரயூைர். திருத்தாண் 5) "நரையார்ந்த விடையேறி” (ஷ, திருவொற். 4; திருப்பறிய. 7) என்பர். எருத்துக்கு நரை என்ற பெயரு முண்டு; கருநரைமேற் சூடே போல் (நாலடி..) எனக் காண்க. நரையேற்றையொப்ப, இடியேற்றையும் நரையுருமேறு" என்ப. இஃது, அதன் வெண்மையும் கடுமையும்பற்றி யாகும். இவற்றால் நரையேற்றான் என்பது நறவேற்றான் என யகர வகரங்களின் ஏகதேச எழுத்தொற்றுமையால், ஆதிப்பாடம் மாறியதாகக் கொள்ளத்தகும். திருப்பள்ளியெழுச்சி முதற்பாசுரத்தில், 'கனவிருள கன்றது' என்று ஓதப்படுவதாயினும், 'கனையிருள் என்பதே தமிழ்வழக்கான பாடம்; 'கனையிருள்கடிவன" என்பர் (நீலகேசி, 455). நறவேற்றான்போல மாறி வழங்கியதே இக் 'கனவிருள்' என்க. 14. ஷ திருவந்தாதி, 96-ஆம் பாசுரத்தில்--- - .................. - கேழ்த்த அடித்தா மரைமலர்மேன் மங்கை மணாளன் அடித்தா மரையாம் அலர் என்று இப்போது ஓதப்படுகின்றது. கேழ்த்த அடித்: தாமரை மலர்' என்பதற்கு நிறம்பொருந்திய தாளைக் கொண்ட தாமரைப்பூ' என்ற பொருளை அரும்பதம் கூறும். இப்பாசுரத்தின் மூன்றாமடியிலே, பின்மூன்று சீர்களின் மோனையெழுத்துக்களை நோக்குமிடத்து,