பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அருளிச் செயற் பாடவமைதி 315 நரவாகனதத்தன்சரிதத்திலும்' இம்மடல்வரலாற்றின் விவரம் தெளிவாகக் காணப்படுவதாம், அதன் சுருக்கம் வருமாறு:-- உதயனகுமாரனான நரவாகனதத்தன், கணிகையர்' தலத்தவளும் ஒப்புயர்வற்ற கட்டழகியுமான மதன மஞ்சுகையைக் காதலித்து மணந்து வாழ்ந்துவந்தனன்.. அக்காலத்தே, மானசவேகன் என்ற வித்யாதரவேந்தன் அவளைக் கண்டு மோகித்து நரவாகனனை மயங்கும்படி. செய்துவிட்டு, மதனமஞ்சுகையைத் தூக்கிச்சென்று! தன் நகர்க்குக் கொண்டு வந்துவிட்டான். உறங்கி' விழித்த நரவாகனன் காதலியைக் காணாமல் மயங்கி' தன் நகர்ப்புறங்களில் தேடித் திரிந்தனன். இஃது இவ்வாறாக, மேற்கூறிய மானசவேகன் தங்கை வேகவதி என்பாள் அந்த நரவாகனதத்தனிடம் மோகங்கொண்டு, மதனமஞ்சுகையின் வடிவோடு அவனிடம் நெருங்கிப் பழகிவந்தாள். ஒருகால் தன் உண்மைநிலையை அவனுக்கு உணர்த்தகேர்ந்தபோது, அவள் பின்வரு. மாறு கூறலாயினள். "என்பெயர் - வேகவதி. என் தமையன், வித்யாதர வேந்தனான மானதவேகன் என்பான். அவன் மதன 1. புதஸ்வாமி என்பார் இயற்றிய நேபாளமான்மியத் திலே, 'பிருகத் கதா ச்லோகஸங்க்ரஹம்' என்ற பகுதியில், உதயனன் சரிதம் சுருக்கமாகவும், அவன் மகன் நரவாகனதத் தன்சரிதம் பெருக்கமாகவும் கூறப்பட்டுள்ளன என்றும், பின்னவனான நரவாகனன் மணந்த மனைவியர்பலருள் அறுவ ருடைய கதைகளே இப்போது கிடைப்பன என்றும், இக்கதை, *வேகவதி லாபம்' என்ற ஸர்க்கத்தில் விவரிக்கப்படுவது என்றும் கூறுவர் (சோம சுந்தரதேசிகர் வெளியிட்ட. நரவாகன தத்தசரிதம், பக். 2; 21-23).