பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 ஆழ்வார்கள் காலநிலை விஷயமாகவும் நம்மாழ்வாரைப்பற்றிக் கூறுமிடத்து: விரிவாகப்பேச நேரும். ஆக, இங்கே சுருக்க மாகவும் ஐயமில்லாமலும் தெரிந்து கொள்ளற்குரியது யாதெனின், கி. பி. 823-க்கு முற்பட்டதான காலமே, எல்லா ஆழ்வார்களும் எழுந்தருளியிருந்தது என்பதே யாம். நாதமுனிகள் காலத்தும் அவர்க்குப்பின்பும் ஆழ் வார்கள் அவதரித்தவர்கள் என்றுசிலர்விடாப் பிடியாகக் கூறிவருவது பிரபிதாமகன் கல்யாண காலத்தில் அவன் பேரன் தாம்பூலம் வழங்கினானென்ற கதைபோன்றதே யன்றிப் பிறிதில்லை. ஆகவே, சங்ககாலத்துக்குப் பின்னும் நாதமுனி களது அவதாரகாலமன 823-க்கு முன்னும், ஆழ்வார்கள் எவ்வெந் நூற்றாண்டில் விளங்கியிருந்தனரென்பதே இனி ஆராயத்தக்கது. ஆழ்வார்கள் வரிசை ஆழ்வார்கள் அவதாரக்கிரமம் அடியில்வரும் ஸ்ரீ மணவாளமாமுனிகள் திருவாக்கால் அறியலாம்:-- " பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை அய்ய னருண்மாறன் சேரலர்கோன்--துய்யப்பட்ட நாதனன்பர் தாட்டூளி நற்பாண னற்கலியன் ஈதிவர்தோற் றத்தடைவா மிங்கு." (உபதேச. மாலை.) திவ்யசூரிசரிதமுடையார்நீங்க மற்றக் குருபரம்பரை யாசிரியர் பெரும்பாலாரும் இம்முறைவைப்பையே கொள்ளினும், நம்மாழ்வார் மதுரகவிகள் இருவர் வைபவங்களையும் எல்லாவாழ்வார்கட்கும்பின் இறுதியில் வைத்து அவர்கள் எழுதுகின்றனர். இவர்க்கெல்லாம் முற்பட்டவரும், ஸ்ரீராமாநுஜர் காலத்தவருமான திரு