பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதலாழ்வார் மூவர் 49 கருத்து அத்துணை வலியுடையதன் றென்பது விளங்கும். இனி, பூதத்தாரும் காரைக்காற் பேயம்மையாருஞ் சேர்ந்து பாடிய ஆரிடவெண்பாவாக யாப்பருங்கல விருத்தியுடையார் காட்டிய பாட்டு மேலே குறிக்கப் பட்டது. அதனால், அப்பெரியாரிருவரும் ஒரு காலத்தவ ரென்பதே அவ்வுரையாளர் கருத்தென்பது பெறப்படும், "அவையடக்கியலே” என்ற தொல்காப்பியச் சூத்திர வுரையுள் (113) “ திரைத்த விரிக்கிற் றிரைப்பினா வாய்போல் உரைத்த வுரைபோகக் கேட்டு - முரைத்த பயன்றவர் செய்வார் சிலரேதந் நெஞ்சத் தியன்றவர் செய்வார் பலர் என்ற வெண்பாவைக் காட்டி 'இது பூதத்தார் அவை யடக்கு' என்றெழுதினர், பேராசிரியரும் நச்சினார்க்கினி யரும், இவ்வெண்பா ஆழ்வாரான பூதத்தாருடையதோ பிறருடையதோ தெரிந்திலது. இனிப் பேயனார் என்ற சங்ககாலத்துப் புலவரொருவர் உளர். அவரையும் பேயாழ்வாரையும் ஒருவரென்று கருதற்கிடமில்லை. இப், பேயாழ்வாரைப் பற்றித் தமிழ் நூல்வழியாக வேறு செய்தியும் கிடைத்திலது. இனி, ஆழ்வார்களை யெல்லாம் ஒரு காலத்தவராகத் திவ்யசூரிசரிதம் கூறுதல் மேலே குறிக்கப்பட்டது. அஃது அவ்வாறு கூறினும், முதலாழ்வார்களை ஏனை யோரினும் முற்பட்ட தொகுதியினராகக் கொள்வதே பொருத்தமென்று தோற்றுகின்றது. நம்மாழ்வார் முதலிய எண்மரைக் கலிபிறந்த பின்னும் முதலாழ் வார்களைத் துவாபர யுகத்தினிறுதியினும் வைத்துக்