பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எச், - கிருஷ்ண சாஸ்திரி, தஞ்சை ராவ் பகதூர் கே, எஸ், சீனிவாச பிள்ளை , எம். சீனிவாச ஐயங்கார், பி, டி, சீனிவாச ஐயங்கார், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் தமிழக வரலாறு காண முனைந்து ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் வரைந்தனர். இந் நிலையில் இவர்களிடையே வாழ்ந்து கால ஆய்வும் கல் வெட்டு ஆய்வும் செய்த பேராசான் மு. இராகவையங் கார். இவரின் கருத்துக்களை ஏற்றவர் பலர்; மறுத்தவர் பலர். என்றாலும் வரலாற்று ஆய்வுலகில் இவர் ஒரு மைல்கல், “சாசனத் தமிழ்க்க வி சரிதம் என்னும் இவரது நூல், இவரின் கல்வெட்டு ஆய்வுக்கு நல்ல சான்று. கால ஆய்வுக்கு இவர் எழுதிய "ஆழ்வார்கள் காலநிலை" தக்க எடுத்துக்காட்டு. மு. இராகவையங்கார் அவர்களுக்கு நூற்றாண்டுவிழா முடிந்து விட்டது, அவர் படைத்த 'ஆழ்வார்கள் காலநிலை' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் ஆய்விட்டன. என்றாலும் அவருடைய ஆராய்ச்சி, மூத்துவிடவில்லை; ஆய்வாளர்களுக்கு மூல பண்டாரமாகவே விளங்குகின்றது. ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வரலாறுகளைக் கூறு வதில் கருடவாகன பண்டிதர் இயற்றிய திவ்ய சூரி சரி தமும், பின்பழகிய பெருமாள்சீயர் மணிப்பிரவாள நடையில் எழுதிய ஆறாயிரப்படி , குருபரம்பரையும் முதன்மையானவை. இவற்றைக் கொண்டே ஆழ் 'வார்கள் ஆசாரியர்கள் வைபவங்களை அறிந்தனர். இவ் வரலாற்றில் ஆசாரியர்கள் வரலாறு, ஆய்வுக்கு உகந்த தாக உள்ளது. ஆழ்வார்கள் வரலாறுகளோ புராணச் சாயல் பெற்றுவிட்டன. அவர்கள் துவாபரயுக இறுதி யிலும் கலியுகத் தொடக்கத்திலும் அவதரித்தார்கள் எனப் புராண காலங்களை அவர்களுக்கு உரியதாக அம் நூல்கள் கூறின. இந்நிலையில் சிறந்த வைணவரான மு. இராகவையங்கார், இக் காலம் பொருத்தமற்றது என்று எண்ணினார். கி. பி. 823-ல் தோன்றிய நாத முனிகளுக்கு முற்பட்டும் சங்க காலத்திற்குப் பிற்பட்டும் வாழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனத் தக்க சான்றுகள் தந்து நிறுவினார். இவர் முடிவு செய்த காலக்குறிப்பே பின்வந்த அறிஞர்களால் பெரிதும் போற்றப் பெற்றது;